மன்மதன் அம்பு படம் பற்றி விமர்சித்த நடிகர் மாதவனுக்கு, நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் மாதவன், மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை; பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை என்று கூறியிருந்தார். இந்த கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இந்த அளவு கொதித்திருக்காது கோடம்பாக்கம். படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த மாதவனே சொல்லியதால் பலரும் மாதவனை போனில் கூப்பிட்டு தங்களது வருத்தத்தையும், கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
மன்மதன் அம்பு படத்திற்கு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மாதவனை திட்டித் தீர்த்தது ஒருபுறமென்றால் திரையுலக முக்கிய புள்ளிகளும் மாதவனை காய்ச்சி எடுத்து விட்டார்களாம். இத்தனை கண்டனங்களை சந்தித்த மாதவனுக்கு பேரதிர்ச்சியாக ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் மன்மதன் அம்பு நாயகன் கமல்ஹாசன். படத்தை சுமாரான படம் என்று கூறியிருப்பதை கண்டித்த கமலிடம், இனிமே இப்படியெல்லாம் வாயை விட மாட்டேன் என்று மாதவன் தெரிவித்திருக்கிறாராம். மாதவனின் மன்னிப்புக்கு பிறகுதான் கூலானாராம் உலக நாயகன்.

No comments:
Post a Comment